நீங்கள் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா..? உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் அளித்த அதிர்ச்சி பதில்.!

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை வந்தது. அப்போது, ஓபிஎஸ்-இபிஎஸ் இரண்டு தரப்பு நேரிடமும் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கும், கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஓபிஎஸ் தரப்பினர், “கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற போது குழு கூட்டமானது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலோடு கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம். ஆனால், கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது யாருடைய ஒப்புதலும் இல்லாமல் தன்னிச்சையாக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டம் கட்சியினுடைய சட்ட விதிகளுக்கு உட்பட்டு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், தற்போது இரு தரப்பும் சமரசம் செய்து, இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்ற ஒரு கேள்வியை நீதிபதி எழுப்பினார். இதற்கு ஓபிஎஸ்-இபிஎஸ் இரண்டு தரப்புமே, “அதற்கான எந்த வாய்ப்பும் தற்போதைக்கு இல்லை” என்று தெரிவித்தனர்.

மேலும் நீதிபதி எழுப்பிய சில கேள்விகளில் முக்கிமயமாக, அதிமுக பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது? என்ற கேள்வி அமைந்தது.

இதனை தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தை நாட ஓ பன்னீர்செல்வத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதில், பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற அமர்வு முடிவு எடுக்கும். எனவே, உயர் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு ஓ பன்னீர் செல்வதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை மூன்று வாரத்திற்குள் முடிக்குமாறு உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.