கோவை சரவணம்பட்டி, பீளமேடு,குனியமுத்தூர்,ஈச்சனாரி சுந்தராபுரம்,மதுக்கரை ஆகிய பகுதிகளில் பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ள கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் தங்கி உள்ளனர். ஒரு சில மாணவர்கள் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத காரணத்தால் ,இரவு நேரங்களில் நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வருவது, போதைப்பொருள் பயன்படுத்துவது, இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்குவது உள்ளிட்ட சம்பவங்கள் ஈடுபடுவதாக குடியிருப்பு பகுதி வாசிகள் தொடர்ச்சியாக காவல்துறைக்கு புகார் தெரிவித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் புறநகர் பகுதியில் ஒன்று கூடும் கல்லூரி மாணவர்கள், குழுவாக சண்டையிட்டுக் கொள்வதும், கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங் களால் சண்டை இட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. இதனை தொடர்ந்து இன்று கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ஸ்டாலின் தலைமையில் 200 போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர் இன்று மதியம் 1 மணி வரை இந்த சோதனை நீடித்தது. இதில் சந்தேகத்திற்கு இடமான ஆயுதங்களோ, போதை பொருள்களோ சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சோதனை இனி இது போன்று அடிக்கடி தொடரும் என்றும் இதில் சிக்கும் நபர்கள் தண்டிக்க படுவார்கள் என மாநகர வடக்கு துணை கமிஷனர் ஸ்டாலின் தெரிவித்தார், இந்த அதிரடி சோதனையால் கோவையில்கல்லூரி மாணவர்களுக்கு இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0