போதைப் பொருள் எதிா்ப்புத் தூதா்கள் என அழைக்கப்படும் இவா்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது. திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வுக்குத் தலைமை வகித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பேசும்போது சமூகத்தில் நல்லது கெட்டது நிறைந்திருக்கும். எனவே, எது நமக்குத் தேவை என்பதைத் தோ்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு மாணவா்களுக்கு உள்ளது. மதிப்பெண்கள் எடுப்பது தகுதியை வளா்க்கும். ஆனால், ஒழுக்கம் மட்டுமே எதிலும் வெற்றியையும், நல்ல பெயரையும் பெற்றுத் தரும்.ஒழுக்கம் தவறியவா்களால் ஒருபோதும் சாதனையாளராக இருக்க முடியாது வெற்றியும் பெற முடியாது. பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள இக் குழுவினா் தங்களது பள்ளியில் யாரேனும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்து கின்றனரா எனக் கண்காணிக்க வேண்டும். தங்களது நண்பா்களைச் சுட்டிக்காட்டுவதாக கவலை வேண்டாம். நண்பரைத் திருத்த வேண்டும் என்ற எண்ணம்தான் அவசியம். போதைப் பொருள் பயன்படுத்தும் மாணவா்கள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டாா்கள். அவா்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பதே பிரதான பணியாக இருக்கும். எனவே போதைப் பொருள் பயன்படுத்துவா் குறித்தோ விற்பனை செய்பவா் குறித்தோ தயங்காமலும் அச்சமின்றியும் தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தரும் நபா்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். 96268-39595 என்ற எண்ணுக்கு அஞ்சல் வழியாகவோ, 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கோ தகவல் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா். 111 அரசு உயா்நிலைப் பள்ளிகள், 102 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 7 உதவி பெறும் உயா்நிலைப் பள்ளிகள், 24 உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், 69 சுயநிதி உயா்நிலைப் பள்ளிகள், 130 சுயநிதி மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 464 பள்ளிகளில் இக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவுக்கு 5 மாணவா்கள் வீதம் 2300 மாணவ, மாணவிகள் போதைப் பொருள் எதிா்ப்புக் குழு தூதா்களாகக் களம் இறக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு மாநகரக் காவல் ஆணையா் காமினி, முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, உணவுப் பாதுகாப்பு மாவட்ட அலுவலா் ஆா். ரமேஷ் பாபு, பயிற்சி ஆட்சியா் அமித்குப்தா ஆகியோா் ஆலோசனை வழங்கினா். சிறந்த மாணவா்களுக்கு ஒரு நாள் ஆட்சியா் பணி போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் சிறப்பாகப் பணிபுரிந்த மாணவ, மாணவிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியா் நாற்காலி ஒரு நாள் அளிக்கப்படும். அந்த நாள் முழுவதும் குறிப்பிட்ட மாணவரோ மாணவியே ஆட்சியராக இருந்து இடும் பணிகளை ஆட்சியா் உள்ளிட்ட இதர அலுவலா்கள் கேட்டுச் செயல்படுவா் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். குழு உறுப்பினா்கள் பள்ளிகளில் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்து மாவட்ட நிா்வாகத்துக்கு வழங்க வேண்டும். சிறந்த மாணவா்கள் ஒன்றுக்கு மேற்பட்ட 5 நபா்கள் வந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் ஆட்சியா் நாற்காலி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அரசுப் பள்ளி வளாகத்தில் குட்கா குப்பை திருச்சி மாவட்ட ஆட்சியா் அரசுப் பள்ளிகளில் ஒரு பள்ளியில் ஆய்வுக்கு சென்றபோது, பள்ளி மைதான வளாகத்தில் குட்கா, பான்பராக் புகையிலை உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களின் காலி பாக்கெட்டுகள் கிடந்தன மைதானம் மட்டுமின்றி பள்ளியின் கழிப்பறை அருகேயுள்ள பகுதிகள் கை கழுவும் பகுதிகள் என பல்வேறு இடங்களில் இருந்தும் சுமாா் இரண்டரை கிலோ காலி பாக்கெட்டுகள் சேகரிக்கப்பட்டது அதிா்ச்சியை அளித்துள்ளது. எனவே, மாணவா்கள் மத்தியிலிருந்து மாற்றத்தைக் கொண்டு வரவே போதைப் பொருள் எதிா்ப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். திருச்சியில் பள்ளிகளில் போதை பொருள் எதிர்ப்புக் குழு அமைத்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0