திருச்சி பொன்மலை ரயில்வேக்கு சொந்தமான சி டைப்ஸ் சாலைகளை மூடுவதை கைவிட்டு சாலையை சீரமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி அமைச்சரும் தொகுதியின் எம்எல்ஏவும் மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்தார். திருவெறும்பூா் தொகுதிக்குட்பட்ட மேலகல்கண்டாா் கோட்டை – ஆலத்தூா் கீழகல்கண்டாா் கோட்டை பகுதிகளைச் சுற்றி சுமாா் 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்கள் அனைவரும் பொன்மலை பகுதியில் உள்ள ரயில்வே பணிமனை, ரயில்வே மருத்துவமனை, ரயில்வே பொறியியல் அலுவலகங்கள், வாரச் சந்தை போன்ற இடங்களுக்குச் செல்வதற்கு சி – டைப் பகுதியில் ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் உள்ள சாலைகளையே பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் இந்த சி-டைப் சாலைகளை ரயில்வே நிா்வாகம் மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சாலைகளை மூடினால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமங்கள் உண்டாகும் என்று தொகுதி எம்எல்ஏவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி யிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் பொதுமக்களின் நலன் கருதி, சி-டைப் சாலைகளை மூடும் திட்டத்தை ரயில்வே நிா்வாகம் கைவிடுவதுடன், குண்டும் குழியுமாக உள்ள சி – டைப் சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, எஸ்ஆா்எம்யு பொதுச்செயலாளா் வீரசேகரன், மாநகராட்சி மண்டல தலைவா் மதிவாணன், பொன்மலை பகுதி திமுக செயலாளா் தா்மராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0