தமிழகத்தில் மாநிலம் முழுவதையும் போதையில்லா தமிழ்நாடு உருவாகும் வகையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிய ஏற்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது அதுபோல் திருச்சி விஷாகவேர் கல்லூரியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் முன்னிலையில் சென்னையிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்க்கிறார் அதுபோல் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கல்லூரி மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்கின்றனர் சமீபகாலமாக தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் அதனை தடுக்க அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இந்த திடீர் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன் நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன் என மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் அதிக அளவு போதை பொருள் புழக்கம் இருப்பதாக அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனை தடுக்கும் வகையில் போதை இல்லா தமிழ்நாடு உருவாக ஆகஸ்ட் 12ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதி ஏற்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்,
நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன் என மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என தமிழக அரசு அனைத்து கல்லூரி பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0