திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்.

திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடந்தது கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் தொழிலாளர் உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அப்போது கலெக்டர் உறுதிமொழி வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் அதனை தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவது குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் மேலும் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி ஆட்சியர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜலட்சுமி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அதியமான் கவியரசு தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர் நாராயணன் நகர் நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.