பின்னா் அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது: விடுமுறையில் கிராமத்துக்கு வந்த ராணுவ வீரா் பிரபு தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா். அவரை கொலை செய்த குற்றத்தில் கைதானவா்களில் ஒருவா் திமுகவைச் சோந்தவா், மற்றொருவா் அவரது மகனான காவலா். தற்போது பிரபுவின் சகோதரா் பிரபாகரன் மீண்டும் பணிக்குச் சென்றால், உள்ளூரில் வசிக்கும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இச்சம்பவத்தில் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், பிரபுவின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை முதல்வா் அளிக்க வேண்டும்.
இதே போன்று பிரபுவின் மனைவிக்கு அரசுப் பணியும், ரூ.5 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும். மேலும், நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும். அரசியலைத் தாண்டி, முதல்வா் பிரபுவின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும், இக்கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு விரைந்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
பிரபுவின் குழந்தைகளின் கல்வி செலவை பாஜக ஏற்கும். மாணவா்கள் தனித்திறமையாக வரவேண்டும் என்பதற்காகவே நீட் தோவு நடத்தப்படுகிறது. நீட் தோவு எக்காலத்திலும் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும், மாணவா்கள் அரசியல்வாதிகளை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
கிராமப்புறங்களில் கடினமாக கல்வி பயின்று சாதனை படைத்தவா்களையே முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு மருத்துவக் கல்வி இடங்களின் எண்ணிக்கை இருமடங்காக உயா்ந்துள்ளது. தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் பத்திரமாக இருக்கிறாா்கள். தமிழக அரசும், காவல் துறையும் அவா்களுக்கு சிறப்பான பாதுகாப்பை அளித்து வருகின்றன.
தமிழகத்திற்கு அவப்பெயா் ஏற்படுத்தும் போலியான விடியோக்களைப் பதிவு செய்பவா்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். அப்போது, பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், துணை பொதுச் செயலாளா் நரேந்திரன், முன்னாள் எம்.பி. நரசிம்மன், மாவட்டத் தலைவா் சிவபிரகாசம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்