திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் வட்டாரம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி பழைய மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ராணி தலைமை தாங்கினார் மாவட்ட துணை தலைவர் அகிலாண் டேஸ்வரி வட்டாரத் தலைவர் அர்ச்சனா வட்டாரச் செயலாளர் கலைவாணிஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு CITU மாவட்ட செயலாளர் ரங்கராஜன் சிறப்புரையாற்றினார். மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கிரேட் 3 மற்றும் கிரேட் 4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியம் ஊழியர்களுக்கு உதவியாளருக்கு வழங்க வேண்டும் என்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை தொகை வழங்க வேண்டும் என்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச டி ஏ உடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது மேலும் பல்வேறு கோரிக்கைகள் முழக்கங்களாக எழுப்பப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் முடிவில் வட்டாரத் துணைத் தலைவர் புவனேஸ்வரி நன்றி கூறினார். இதில் ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.