நள்ளிரவில் 9-வது மாடியில் இருந்து குதித்து மூதாட்டி. தற்கொலை .

கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சின்னமணி ( வயது 70) கணவர் ஆறுமுகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் சின்னமணி சரவணம் பட்டி சிவானந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகள் கிருஷ்ணவேணியுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக மனநிலை சரியில்லாமல் இருந்தாராம். இதற்கு சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் தான் வசித்தஅடுக்குமாடி குடியிருப்பில் 9 – ம் மாடிக்கு சென்றார். திடீரென்று அங்கிருந்து கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.