கோவை வடவள்ளி ,பாரதியார் பல்கலைக்கழகம், குருசாமி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் .இவரது மனைவி ரோகினி ( வயது 76)ஸ்டேட் வங்கியில் ஊழியராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்.இவர் நேற்று அவரது வீட்டில் கேஸ் ஸ்டவ் அடுப்பில் “டீ “போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இவரது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் கருகியது . சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0