கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள சக்திநகரை சேர்ந்தவர் பக்தி ராஜ் ( வயது 65)பெயிண்டர். இவர கடந்த 2019-ம் ஆண்டுஅதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பக்தி குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இவ்வழக்கு கோவை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எதிரி பக்திராஜ்க்கு 5 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ. 10, ஆயிரம் அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரிநிர்மலா தேவி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற முதல்நிலைக் பெண் காவலர் மஞ்சுளா தேவிஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பாராட்டினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0