கோவை சூலூர் பக்கம் உள்ள இடையர்பாளையத்தை சார்லஸ் சிங் ( வயது63) கடந்த 2020 ஆம் ஆண்டு விடுதியில் தங்கியிருந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாக பேரூர் அனைத்து மகளிர் போலீசார் இவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது .நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர் குற்றம் சாட்டப்பட்ட சார்லஸ் சிங்கிக்கு 22 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ,ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞராக ஜமீனா பானு வாதாடி னார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0