கோவை துடியலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலக அருகே இ சர்வீஸ் மையம் நடத்தி வருபவர் ஈஸ்வரன் இவரது மனைவி சூர்யா( வயது 37 )நேற்று இவரது இ-சேவை மையத்துக்கு கணபதி, நல்லாம்பாளையம் ரோடு ,ரங்கா லே அவுட்டை சேர்ந்த வாசு தேவன் (வயது 66 )என்பவர் உரிமம் புதுப்பிப்பதற்காக வந்திருந்தார். அவரிடம் சூர்யா 1600 ரூபாய் கேட்டார். அதற்கு வாசுதேவன் ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு மீதி தொகையை நாளை தருவதாக கூறினார். இந்த நிலையில் நேற்று வாசுதேவன் அங்கு சென்றார். அப்போது சூர்யா பாக்கி தொகையை யான. 600 ரூபாயைகேட்டார். இதனால் இவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரம் அடைந்த வாசுதேவன் சூர்யாவை தகாத வரர்த்தைகளால்பேசிதாக்கினாராம்.பிறகு அங்கிருந்தகம்ப்யூட்டரை உடைத்து செயல்படுத்தினார். இது குறித்து சூர்யா துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார் போலீசார் வாசுதேவன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், உடைத்து சேதப்படுத்துதல், தகாத வார்த்தைகளால் பேசுதல், உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0