9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை.

கோவைமாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள அர்த்தநாரிபாளையம், ரெட்டியாரூரைச் சேர்ந்தவர் பெருமாள் ( வயது 64) இவர் 2021 ஆம் ஆண்டு அங்குள்ள ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பெருமாளை கைது செய்தனர். இவர் மீது போக் சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்து நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட பெருமாளுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 5000 அபராத மும் ,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 2 லட்சம் இழப்பீட்டு தொகையும் வழங்க கோரி தீர்ப்பளித்தார்.