கோவை; காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் இப்ராகிம் பாட்சா ( வயது 54) டிரைவர். இவரது தங்கை சம்சத் பேகம் ( வயது 50) இவர்கள் இருவரும் அதிக உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தனர். இதற்காக அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2 நாட்கள் முன்பு கோவை காந்திபுரத்துக்கு காரில் வந்து ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அப்போது அவர்கள் ஓட்டல் அதிகாரியிடம் உடல் பருமனுக்கு ஆயுர்வேத சிகிச்சை பெற வந்திருப்பதாக கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த ஓட்டலில் இருந்த அறையில் தங்கினர். ஆனால் அவர்கள் அறையை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இப்ராகிம் பாட்சா மட்டும் திடீரென்று ஓட்டல் அறையில் இருந்து வரவேற்பு அறைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். வெகு நேரமாகியும் அவர் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறைக்கு சென்றனர். அந்த அறை பூட்டப் பட்டிருந்தது. உடனே ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சம்சத் பேகம் வாயில் நுறை தள்ளிய படி இறந்து கிடந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கொடுத்த தகவலின் பெயரில் காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினார்கள் .இதில் சம்சத் பேகம் அதிக அளவில் தூக்க மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவரது உடல் அருகே ஒரு கடிதம் கிடந்தது. அதில் நானும் என் அண்ணனும் உடல் பருமனால் அவதிப்பட்டுவந்தோம். இதனால் எங்களுக்கு வாழ பிடிக்கவில்லை. எனவே தற்கொலை செய்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சம்சத் பேகத்தின் உடலை போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தங்கை சம்சத் பேகம் தற்கொலை செய்த நிலையில் அண்ணன் இப்ராகிம் பாட்சா அறையிலிருந்து வெளியேறியது போலீசருக்கு சந்தேகம் ஏற்பட்டது.. உடனே போலீசார் இப்ராகிம் பாட்சா வந்த காரின் பதிவு எண் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் முதலில் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் கார் கோவை ரயில் நிலையம் அருகே நிறுத்தப் பட்டிருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தபோது காருக்குள் இப்ராகிம் பாட்சா இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர் தற்கொலை செய்து கொள்வ தற்காக தங்கையுடன் சேர்ந்து தூக்க மாத்திரை தின்றதாகவும், தங்கையை விட குறைந்த எண்ணிக் கையில் தூக்க மாத்திரை தின்றதால் தான் இறக்கவில்லை என்றும் .இதனால் பிளேடை உடைத்து விழுங்கியதாகவும், மேலும் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள கோவை ரயில் நிலையம் பகுதிக்கு வந்ததாகவும் கூறினார். உடனே போலீசை இப்ராகிம் பாட்சாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy1
Angry0
Dead0
Wink0