நீலகிரி மாவட்டம் உதகை ஜே எஸ் எஸ் மருந்தாங்கியில் கல்லூரியில்
14 உலக நாடுகளின் ஆராய்சியாளர்கள் 10 தொழில் துறை நிறுவனங்கள் 53 கல்லூரிகள் 1350 ஆராய்சியாளர்களின் சங்கமமான சர்வதேச கருத்தரங்கம் உதகையில் ஜெ.எஸ். எஸ் மருந்தாக்கியல் கல்லூரி ஏற்பாடு செய்யப்பட்டன, இந்தக் கருத்தரங்கில் உலகளாவிய மருந்தாக்கியல் துறையில் உள்ள தடைகளை தவிர்ப்பது தொடர்பான மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது, ஜே எஸ் எஸ் கல்லூரி விழா அரங்கில் வண்ணமயாமாய் நடைபெற்ற தொடக்க விழாவை ஜெ.எஸ்.எஸ். பல்கல கழக இணை வேந்தர் முனைவர் பி.சுரேஷ்,
ஜெ.எஸ்.எஸ். பல்கல கழக துணைவேந்தர் டாக்டர் சுரேந்திர சிங், பிரபல கிரிகெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் , வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி துணைத் தலைவர் டாக்டர் சேகர் விஸ்வநாதன்,ஜெ.எஸ்.எஸ். பல்கல கழக பதிவாளர் மஞ்சுநாத்,
ஜெ.எஸ்.எஸ கல்லூரி முதல்வர் டாக்டர் தனபால் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர் ஜெ.எஸ்.எஸ். பல்கல கழக இணைவேந்தர் முனைவர் பி.சுரேஷ் பேருரையாற்றினார், சிறப்பு விருந்தினர் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் சிறப்பு விருந்தினராக வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி துணைத் தலைவர் டாக்டர் சேகர் விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் JSSCP, ஊட்டி (ஜனவரி-டிசம்பர் 2023) இன் கான்ஃபெரன்ஸ் க்ரோனிக்கல் மற்றும் வெளியீடுகள் விழாவின் போது வெளியிடப்பட்டன.
இறுதியாக கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் என்.கிருஷ்ணவேணி நன்றியுரை ஆற்றினார். உலகெங்கிலும், 1350 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்றனர் அவற்றில் 460 ஆய்வு கருத்து சுருக்கங்கள் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன இந்த மூன்று நாட்களில் சமீபத்திய ஆராய்ச்சி பணிகள் குறித்த கலந்துரையாடல்கள் பேருரைகள் கருத்துரைகள் நடைபெறுகின்றன இந்த சர்வதேச கருத்தரங்கம் 14 உலக நாடுகளின் ஆராய்சியாளர்கள் 10 தொழில் துறை நிறுவனங்கள் 53 கல்லூரிகள் 1350 ஆராய்சியாளர்களின் சங்கமமாய் நடைபெறுவது குறுப்பிடதக்கதாகும்
இந்த கருத்தங்கில் பல்வேறு மாநிலங்களைச்சார்ந்த மருந்தாக்கியல் துறை ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துக் கொண்டு பயன் பெறுவர் என தெரிவிக்கபட்டு உள்ளது நடைபெற்ற கருத்தரங்கில் ஜே எஸ் எஸ் மருந்தாங்கியில் கல்லூரியின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை வெகுவாக சிறப்பித்தனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0