கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி,உலாந்தி, மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரகப் பகுதிகளில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டு வழக்கம் போல 32 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று 23 ஆம் தேதி தொடங்கி இன்றும் நாளையும் நடைபெறுகிறது ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் இராமசுப்ரமணியம் மற்றும் துணை இயக்குநர் பர்கவதேஜா ஆகியோர் உத்தரவிற்கிணங்க நடைபெறும் இந்தபணி மானாம்பள்ளி வனச்சரகப்பகுதிகளில் 8 சுற்றுகள் உள்ள நிலையில் அதை ஒவ்வொரு சுற்றையும் ஒரு பிளாக்காக பிரிக்கப்பட்டு தனியார் தனியார் தோட்ட பகுதிகளையும் ஒரு பிளாக்காக பிரித்து மொத்தம் ஒன்பது பிரிவுகளில் இந்த ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்று வருகிறது இதில் முதல் நாளான நேற்று பிளாக் கவுண்ட் பணி நிறைவடைந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று நேர்க்கோட்டுபாதையில் கணக்கெடுக்கும் பணியும் மூன்றாவது நாளான நாளை நீர்நிலைப்பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியும் நடைபெறுகிறது மேலும் இப்பணி அண்டை மாநிலமான கேரளா,ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என மொத்தம் நான்கு மாநிலங்களிலும் இந்த ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி ஒரே நேரத்தில் மேற்க் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0