மும்பை போலீஸ் அதிகாரிகள் போல் நடித்து மாஜி ராணுவ அதிகாரி – வியாபாரியிடம் ரூ. 55 லட்சம் மோசடி.

கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் 69 வயது முதியவர். இவர் ராணுவத்தில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் வீட்டில் இருந்து வந்தார். அப்போது இவரை தொடர்பு கொண்ட ஒருவர் மும்பையில் இருந்து அமலாக்க பிரிவு அதிகாரி பேசுவதாக கூறினார். ராணுவ அதிகாரியின் ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு மூலம் ஏராளமான பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறினார்.. பின்னர் வீடியோ காலில் சீருடை அணிந்த ஒரு போலீஸ் அதிகாரி பேசினார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் வங்கி கணக்கு ஆய்வு செய்ய வேண்டும். என்றும் அதிலுள்ள பணத்தை தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனை நம்பி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தனது வங்கி கணக்கில் இருந்த ரூ. 24 லட்சத்தை அனுப்பினார். அதன்பின்னர் அந்த பணம் திருப்பி அனுப்பப்படவில்லை. இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த அவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். இதேபோல கோவை தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்தவர் கணபதி ராஜ்குமார் (வயது 47) தங்க நகை வியாபாரி. இவரது செல்போனில் தொடர்பு கொண்ட ஆசாமிகள் தங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவதாக கூறினர்.இதற்கு முன் லாபம் அடைந்த வர்கள் பட்டியலையும் அனுப்பினார்கள். இதனை நம்பிய கணபதி ராஜ்குமார் ரூ 31 லட்சத்தை முதலீடு செய்தார்.லாபம் எதுவும் கொடுக்கவில்லை. அதனால் பணத்தை திருப்பி கேட்ட போது அவர்கள் திருப்பி தராமமல் மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார் 2பேரிடமும் மொத்தம் ரூ. 55 லட்சம் மோசடி நடந்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.