கோவை, அவினாசி சாலை வ.ஊ.சி,பூங்கா அருகே உள்ள காவலர் சமுதாய கூடத்தில் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களான பெண் குழந்தைகள் காப்பது, கற்பிப்பது, குழந்தை திருமணம் தடுப்பு மற்றும், டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா, தேசிய விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகஸ்ட் 27ம்தேதி முதல் 31ம் தேதி வரை.ஐந்து நாட்கள் நடைபெறுகிறது, இதில் மத்திய அரசின் அரங்குகளுடன் கண் காட்சியும், பார்வையாளர்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம், பொது மக்கள் பங்கேற்க பரிசுகளுடன் போட்டிகள் நடத்த படுகிறது. இந்நிகழ்ச்சி தொடக்கமாக மத்திய மக்கள் தொடர்பக கள விளம்பர அலுவலர் கே.தேவி பத்மநாபன் வரவேற்க, முன்னிலையாக மண்டல அலுவலக இயக்குனர் மா.லீலா மீனாட்சி யும், தலைமை ஏற்று சிறப்புரை ஆற்ற சென்னை பத்திரிக்கை அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் மா.அண்ணாதுரை யும், சிறப்பாளராக கோவை எம்பி கணபதி ராஜ்குமார்,கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசவுள்ளனர், மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மக்கள் கூடும் இடங்களிலும், கிராம புறத்திலும் மக்கள் முன்பு நடத்த படவுள்ளது , விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியானது கோவையில் மாகாளியம்மன் கோவில், மார்க்கெட் ரோடு, சூலூர், காமாட்சிபுரம், மேட்டுப்பாளையத்திலும் ,28ம்தேதி சீராபாளையம், 29ம்தேதி வழுக்குப்பாறை, 30ம்தேதி ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல் நிலை பள்ளி மாணவ மாணவிகள் முன்பும் நிகழ்ச்சி நடத்த படவுள்ளது என தெரிவித்தனர், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் சார்ந்த இந்த மக்கள் விழிப்புணர்வு கண்காட்சி அரங்கில் , ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சமூக நல திட்டம், இந்திய அஞ்சல் துறை, கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், பிரதமரின் மக்கள் நல மருந்தகம், காச நோய் தடுப்பு, சங்கரா கண் மருத்துவ மனை அரங்குகள் இடம் பெறுகிறது மேலும் ஐந்து நாட்கள் நடைபெறும் மத்திய அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் விழிப்புணர்வு கண்காடசியை பொது மக்கள் யாவரும் பங்கேற்று பயன் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர் நிகழ்ச்சியில் மேலும் அறிந்து கொள்ள மத்திய மக்கள் தொடர்பகத்தின் தொழில் நுட்ப உதவியாளர் முரளியிடம் தொடர்பு கொள்ள அறிவுறித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0