ஸ்வீட்ஸ் கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி.

கோவை ரத்தினபுரி பெரியார் வீதியைச் சேர்ந்தவர் தேவசகாயம் ( வயது 60) இவர் அந்த பகுதியை ஸ்வீட்ஸ் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையில் ஷட்டரின் கீழ்பகுதி வழியாக சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடையை திறபதற்காக தேவசாயத்தின் மகன் சென்றார் .அப்போது பெட்ரோல் ஊற்றப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். யாரோ கடையில் ஷட்டரின் கீழ் பகுதி வழியாக பெட்ரோல் ஊற்றி கடைக்கு தீ வைக்க முயற்சி செய்திருப் பது தெரியவந்தது. அந்த நேரத்தில் அந்த நேரத்தில் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. எனவே அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர் என்று கூறப்படுகிறது இந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள்.