சூலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்கத்தின் சார்பில் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது.

சூலூர் அரசு மருத்துவமனை 1928 ஆம் ஆண்டு அரசு மருந்தகமாக தொடங்கப்பட்டு இன்று சூலூர் வட்ட மருத்துவமனையாக தரம் உயர்ந்த பட்டிருக்கிறது மருத்துவமனையில் ஆண்டுதோறும் நோயாளிகள் நல சங்கத்தின் மூலம் கூட்டம் நடைபெற்று கூட்டத்தில் மருத்துவமனைக்கு தேவையான பொருட்கள் மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் மருத்துவமனைக்கு நோயாளிகளின் வருகை ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெற்று தொடர்ந்து மருத்துவமனையில் சிறப்பான சேவை செய்திட கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் மூலம் மருத்துவமனை சிறப்பாக செயல்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டது மருத்துவமனையில் கடந்த ஆண்டு புறநோயாளிகளாக ஒரு லட்சத்து 33 ஆயிரம் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகை தந்து பயன் அடைந்து இருக்கிறார்கள், உள் நோயாளிகளாக கடந்த ஆறு மாதங்களில் 1033 பெரும் அவசர பிரிவில் 3485 நோயாளிகள்,பல் மருத்துவத்தில் 2633 பேரும் பயனடைந்தனர் தொடர்ந்து மருத்துவமனையில் மகளிர் மகப்பேறு , அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு சிறப்பு சிகிச்சை, குழந்தைகளுக்கு தேவையான அனைத்து தடுப்பூசி வகைகள், நுண்கதிர் கதிர் பரிசோதனை, அனைத்து வகையான ரத்த பரிசோதனைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் இருமுறை கவுன்சிலிங் தரப்படுகிறது . முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அனைத்து சிறப்பு சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . மருத்துவமனைக்கு சூலூர் வட்டத்துக்குட்பட்ட பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்தும் நோயாளிகள் அதிக அளவில் வருவதால் அவர்களுக்கு மேற்கொள்ளக்கூடிய பரிசோதனை கருவிகளும் ஆட்கள் பற்றாக்குறையும் இருப்பதும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மருத்துவர் வாணி ரங்கராஜன் தலைமையில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் கஜேந்திரன் முன்னணியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் மன்னவன், பேரூராட்சி துணைத் தலைவர் கணேஷ், மதிமுக மாவட்ட அவைத் தலைவர் கருணாநிதி, சூலூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள்போதுமன்றம் டால்பின்மாரிமுத்து மற்றும் மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.