11 மாத ஆண் குழந்தை திடீர் சாவு.

கோவை அருகே உள்ள வெள்ளலூர், பசுபதி வீதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 28). டிரைவர். இவருக்கு 11 மாத ஆண் குழந்தைஉள்ளது. பிறப்பில் இருந்து இந்த குழந்தைக்கு மூச்சு திணறல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் குழந்தை இறந்து விட்டது. இது குறித்து மனோஜ்குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.