ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், மிரட்டல் விடுத்துவந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் செய்தனர்.
காஷ்மீர் மாநிலத்தில் 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு சென்றுள்ளார். முன்னதாக, அங்கு சிறைத்துறை ஐஜி ஒருவரை, அவருடைய உதவியாளராக இருந்த நபர் கழுத்தறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அமித்ஷா வருகைக்கு எச்சரிக்கையாக இந்த கொடை நடைபெற்றுள்ளதாக உள்ளுர் பயங்கரவாத அமைப்பு ஒன்று மிரட்டல் விடுத்தது.
இந்த நிலையில், இன்று சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையின்ர வேட்டையாடினர். பயங்கரவாதிகளுக்கு அங்குள்ள பொதுமக்கள் ஆதரவு கொடுத்து வரும் நிலையில், அந்த பகுதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என காஷ்மீர் கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகளில், 3 பேர் ‘ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர்கள் சோபியான் மாவட்டத்தின் ட்ராச் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர், ட்ராச் பகுதியில் நடந்த என்கவுன்ட்டர் இன்னும் தொடர்ந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.