திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்வு.

திருச்சி: பீமநகர்தெற்கு யாதவ தெருவில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் தலைமையக பள்ளிவாசல் வளாகத்தில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பீமநகர் எஸ். ரபிக் தலைமையில் சகோதரி முஸ்பிரா பதுருதீன் (வழக்கறிஞர்) சகோதரர் ஆனந்தகுமார் (வழக்கறிஞர்) இவர்கள் முன்னிலை ஏற்க இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு கலந்துகொண்டு புதிய ஆம்புலன்ஸ் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். நிகழ்வில் திருச்சி மாநகர மேயர் அன்பழகன் திருச்சி மத்திய மாவட்டதிமுக செயலாளர் வைரமணி பொன்மலை கோட்ட தலைவர் துர்காதேவி Mc. வட்டச் செயலாளர் செல்வராஜ் மற்றும் யூ டி ஜே நிர்வாகிகள் பெண்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டார்கள்.