சென்னை மாநகராட்சி மண்டலம் 7 அலுவலகம் அம்பத்தூரில் செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகத்தில் வருவாய்த் துறைக்கு வரும் பொதுமக்களிடம் அதிக அளவில் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சரமாரியாக புகார்கள் வந்தன. இதன் காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையில் அம்பத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை போட்டனர். இந்த சோதனையில்கணக்கில் வராத பணம் ரூபாய் 2 லட்சத்து 55 ஆயிரம் சிக்கியது. இது தொடர்பாக உதவி வருவாய் அலுவலர் ஆறுமுகம் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லபக் கென்று பிடித்து து ருவித் து ருவி விசாரித்து வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வருகிறார்கள் என்று தெரிந்ததும் பெண் ஊழியர்கள் துண்டை காணோம் துணியை யை காணோம் என்று ஓடிவிட்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0