ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் எப்போதும் இரண்டாம் கட்டத்தில் தான் தேர்தல் நடக்கும். ஆனால் இந்த முறை முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச் 27-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அவற்றின் மீதான பரிசீலனையும் முடிந்துவிட்டது. இன்று வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்புமனுக்கள் மீது வியாழக்கிழமை பரிசீலனை நடந்த நிலையில், அதில் பிழையாக இருந்த மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த 664 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தற்போது வரை மொத்தம் 1,085 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்றே கடைசி நாளாகும். நேற்று புனித வெள்ளி காரணமாக அரசு விடுமுறை வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்படவில்லை. இந்தச் சூழலில் இன்று வேட்புமனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள் என்பதால் இன்று பலரும் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெறுவார்கள் எனத் தெரிகிறது. இன்று ஒரே வேட்பாளர் பல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தால் தேவையில்லாத மனுக்கள் திரும்பப் பெறப்படும். இதன் காரணமாக மொத்த வேட்புமனுக்கள் எண்ணிக்கை 1000க்கு கீழ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்! மாலை வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்!
துரை வைகோ: அதைத் தொடர்ந்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டது. இந்த முறை அக்கட்சி சார்பில் வைகோ மகன் துரை வைகோ களமிறங்கும் நிலையில் அவர் தனி சின்னத்தில் தான் போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறார். மதிமுகவின் பம்பரம் சின்னம் கேட்டு அவர்கள் நீதிமன்றம் வரை சென்றன. இருப்பினும், அங்கே அவர்களுக்குச் சாதகமான முடிவு கிடைக்கவில்லை. பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டாலும் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்பதில் துரை வைகோ உறுதியாக இருக்கிறார். திமுக அமைச்சர்களுடன் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில் அவர் இதை வெளிப்படையாகவே கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் இன்று பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சையாகப் போட்டியிடுவோருக்குச் சின்னம் ஒதுக்கப்பட்டது. என்ன சின்னம்: அதன்படி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக உள்ள மதிமுகவுக்கு இப்போது சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கித் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக இந்த முறை திருச்சியில் போட்டியிடுகிறது. வைகோவின் மகன் துரை வைகோ இதில் களமிறங்குகிறார். அவருக்குத் தான் இப்போது தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வைகோவுக்கு சரியான சின்னத்தைத் தான் தேர்தல் அதிகாரி ஒதுக்கி உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்டபோது, அதைக் கண்டித்து பலரும் தீக்குளித்தனர். அது அப்போது மிகப் பெரிய பேசுபொருளாக மாறியது. இந்தச் சூழலில் அவரது கட்சிக்குத் தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அதைக் குறிப்பிட்டு சிலர் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0