திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரலாறு காணாத பலத்த மழையினால் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களின் வீடுகள் பெருத்த சேதம் அடைந்தது இதனால் வீடுகள் இல்லாமல் தவிக்கும் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முழுமையாக சேதம் அடைந்த வீடுகளை புதியதாக கட்டிக் கொள்ள ரூ 4 லட்சமும் பகுதியாக சேதம் அடைந்த வீடுகளை பழுது நீக்கம் செய்வதற்கு ரூ 2 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளின் கணக்கெடுப்பு வருவாய் துறையினரும் பேரூராட்சி துறையினரும் இணைந்து சேதமடைந்த வீடுகளின் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர் மீஞ்சூர் பேரூராட்சியில் 1 வீடும் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 3 வீடுகளும் தேர்வு செய்யப்பட்டு புதியதாக தரமாகவும் பளபளக்கும் வகையில் பொதுமக்கள் வியக்கும் வண்ணம் கட்டப்படும் என இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் இணைந்து செய்தியாளர்களிடம் கூறினர் அப்போது ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர்கோ. சதீஷ் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0