அகில இந்திய காவலர் மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் 19.6.2024 வரை நடைபெறுகிறது இப் போட்டியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர் மத்திய காவல் அமைப்பினர் எண் 30 அணிகளைச் சேர்ந்த 453 துப்பாக்கி சு டும் வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிடுகிறார்கள் தமிழக காவல்துறை யின் தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் சங்கர் ஜீவால் அவர்கள் தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி மையத்திற்கு வருகை தந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வாங்கினார் பின்பு பயிற்சி வளாகத்தில் மரக்கன்றையும் நட்டார் கை துப்பாக்கி சு டும் போட்டி40-30 கெஜம் ரன் & ஷூட் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை தலைமை காவலர் பாரதி முதல் இடத்தையும் அசாம் ரைபிள்ஸ் வீராங்கனை காவலர் ஜுலியா தேவி இரண்டாவது இடத்தையும் தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை உதவி ஆய்வாளர் சுதா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர் ரைபிள் சுடும் போட்டி 300 கஜம் ப்ரோன் போட்டியில் அசாம் காவல்துறை வீராங்கனை காவலர் பிரியங்கா போரோ முதலிடத்தையும் அசாம் ரைபிள் ஸ் வீராங்கனை காவலர் திவ்யா சைனி இரண்டாம் இடத்தையும் இந்தியா திபெத் எல்லை காவல் படை வீராங்கனை காவலர் மம்தா ஒலி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர் கை துப்பாக்கி சுடும் போட்டியில் 50 கஜம் ஸ்னாப் ஷூட்டிங் ப் ரோன் பொசிஷன் போட்டியில் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனை காவலர் பாரா மிலா கர்நாடக காவல்துறை வீராங்கனை துணைக் காவல் கண்காணிப்பாளர் நிகிதா இரண்டாவது இடத்தையும் தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை தலைமை காவலர் பாரதி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர் ரை பிள் சுடும் போட்டி 300 கஜம் ஸ்னாப் போட்டியில் உத்திர பிரதேச காவல்துறை வீராங்கனை காவலர் சரோஜ் முதல் இடத்தையும் தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை காவலர் சோனியா இரண்டாவது இடத்தையும் எல் னை பாதுகாப்பு படை வீராங்கனை காவலர் கஜோல் சவுத்ரி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர் கார் பைன் சுடும் போட்டி25 கஜம் பேட்டில்கிரௌச் போட்டியில் இந்திய திபெத் எல்லை காவல் படை வீராங்கனை காவலர் தேஜஸ்வரி முதல் இடத்தையும் தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை காவலர் சுசி இரண்டாவது இடத்தையும் தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை காவலர் கீதா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.