பருத்தி காட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது -15 லிட்டர் ஊறல் அழிப்பு..!

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள முனிகாட்டியூர்,ராஜலிங்கம் பருத்திக்காடு பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது.போலீஸ் துணை சூப்பிரண்டு ஜனனி பிரியா தலைமையில் போலீசார் விரைந்து சென்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது 15 லிட்டர் சாராய ஊறல்கள்  அழிக்கப்பட்டது.. இது தொடர்பாக காரமடை பெரிய புத்தூர் முனுகாட்டி யூரை சேர்ந்த சண்முகம் (வயது 58) கைது செய்யப்பட்டார்..