மும்பை: மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜ., சிவசேனாவின் கூட்டணியில் இணைந்தேன்.துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் இருந்து, பிரிந்து அஜித் பவார் தலைமையில் சில எம்.எல். ஏக்கள் பாஜ., சிவசேனாவின் கூட்டணி இணைந்தனர். பின்னர், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவியும், 8 எம்எல்ஏ.,களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அஜித்பவார் விளக்கம் தற்போது, தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜ., சிவசேனா கூட்டணியில் இணைந்தது குறித்து அஜித் பவார் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது, அவர் கூறியதாவது: மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜ., சிவசேனாவின் கூட்டணியில் இணைந்தேன். பாடுபடுவோம் அரசியலில் நிரந்தர எதிரிகளும் நண்பர்களும் இல்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்காக இந்த முடிவை எடுத்தோம். நாங்கள் எப்போதும் விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுவோம். வயல்களில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் நடக்காது. நான் மாநிலத்தில் நீர்வளத்துறையாக இருந்தபோது நிறைய வேலை செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.