திருச்சி ரயில்வே சந்திப்பின் முதல் நடைமேடையில் பயன்படுத்தப்படாத பழைய முன்பதிவு அலுவலகம் மற்றும் வரிசைப் பகுதியில் அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளதுஇங்கு உறங்கும் அறைகள், குடும்ப அறை மசாஜ் நாற்காலிகளைக் கொண்ட ஓய்வறை ஒரு ஆடை அறை பயண மேஜை சிற்றுண்டி உணவகம் குளியலறை கழிப்பறை போன்ற பயணிகளுக்கான அத்தியாவசிய வசதிகள் உள்ளன. 10 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் இயக்கப்படும் இந்த வசதிகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுகுறித்து ஒப்பந்ததாரா் கூறுகையில், ஒரு மணி நேரத்துக்கு ரூ. 30 கொடுத்து நவீன ஏசி தங்குமிடத்தை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் உறங்கும் அறைக்கு முதல் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 99 2 மணி நேரத்துக்கு ரூ. 170 3 மணி நேரத்துக்கு ரூ. 210, 6 மணி நேரத்துக்கு ரூ. 360 12 மணி நேரத்துக்கு ரூ 499 வசூலிக்கப்படும். குடும்ப அறையில் ஓய்வெடுக்க 6 மணி நேரத்துக்கு ரூ. 699 12 மணி நேரத்துக்கு ரூ 999 ஆகும்.நவீன ஏசி தங்குமிடத்தைப் பயன்படுத்துவோா் ஆடைகள் உள்ளிட்ட பைகளை வைக்கும் அறையை 6 மணி நேரத்துக்கு முறையே சிறிய நடுத்தர மற்றும் பெரிய பொருள்களுக்கு ரூ. 10ரூ. 20ரூ 30 ரூபாய் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். 24 மணி நேரமும் சுத்தமான குளியலறை கழிப்பறை வசதிகள் உள்ளன என்றாா்
ரயில் நிலைய நடைமேடையில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் லாக்கா் வசதி.டிஜிட்டல் லாக்கா் வசதி திருச்சி சந்திப்பு ரயில் நிலைய முதல் நடைமேடையில் டிஜிட்டல் லாக்கா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.24 மணி நேரமும் பயணிகளின் சிறிய அல்லது பெரியளவிலான உடைமைகளை பாதுகாக்கும் வகையில் 3 மணி நேரத்துக்கு ரூ 15 முதல் 24 மணி நேரத்துக்கு ரூ. 240 வரை இந்த லாக்கா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கண்காணிப்புடன் செயல்படும் இந்த டிஜிட்டல் லாக்கரை ஓடிபி வழியே கைப்பேசி எண் சரிபாா்ப்பின் மூலம்தான் திறக்க முடியும். டிஜிட்டல் முறையில் மட்டுமே பயணிகள் லாக்கருக்கான வாடகையைச் செலுத்த முடியும். மிகவும் நம்பகமான பாதுகாப்பான சேவையை இந்த டிஜிட்டல் லாக்கா் வழங்குகிறது என இதைப் பராமரிக்கும் ரயில்வே ஒப்பந்ததாரா் தெரிவித்தாா் இது ரயில் பயணிகளுக்கு மிகவும் வரப் பிரசாதமாக அமைந்தது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0