திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் பொறியாளர் இப்ராம்ஷா தலைமையில், திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள, தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை, அதிமுக மாநில மாணவரணி செயலாளர், முன்னாள் எம்பி. எஸ்.ஆர் விஜயகுமார் துவக்கி வைத்தார். இந்த முகாமில் ரத்த அழுத்தம் கண்டறிதல் எடை கண்டறிதல் ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல் உடல் வலி வயிற்று வலி மற்றும் புற்றுநோய் மருத்துவம் பொதுவான மருத்துவம் உள்ளிட்ட ஆலோசனைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதில் மூன்று மருத்துவர்கள் ஏழு செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள் 11 பேர் என மொத்தம் 21 பேர் மருத்துவ முகாமில் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் பிரியாணி உணவு அன்னதானமாக அதிமுக மாணவரணி சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்வில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் எம்பி குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் முன்னாள் எம்பி ரத்தினவேல் அம்மா பெயரை மாநிலத் துணைச் செயலாளர் அரவிந்தன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன் இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் பகுதிகளாகச் செயலாளர் அன்பழகன் முஸ்தபா ஏர்போர்ட் விஜி பொன்னார் திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணை தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு இந்த ரத்ததான முகாமையும் அன்னதானத்தை பெற்றுக் கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0