திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தாலும் அரசியல் கால் புண்ச்சியோடு அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முறையாக பராமரிக்காத காரணத்தாலும் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் திமுக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டு காலமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது இதன் காரணமாக சாலைகள் அனைத்தும் போக்குவரத்திற்கும் சாலையில் செல்வதற்கும் பயனற்ற நிலையில் உள்ளது. சொத்து வரி வீட்டு வரி குப்பை வரி பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தி உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர் மேலும் குடி தண்ணீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் பல்வேறு இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவி வருவதோடு 60க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு பலர் மரணம் அடைந்து விட்டதாகவும் அப்பகுதி மக்கள் ஆதங்கத்தோடு தெரிவிக்கின்றனர் குடிநீர் பராமரிப்பு பணி குப்பை சேகரிப்பு பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் தனியாரிடம் தாரைவாக்கப்பட்டுள்ளது திமுக அரசின் மெத்தன போக்கிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி நிலை வரும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பராமரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் வருகிற 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான பா மோகன் தலைமையிலும் ஜெ சீனிவாசன் முன்னிலையிலும் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கழக தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0