கோவை மாவட்டம் வால்பாறையில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிமுக நகரக்கழகத்தின் சார்பாக நகரச்செயலாளர் மயில் கணேசன் கட்சி கொடியேற்றிவைத்து வருகின்ற 2026 சட்டபேரவை தேர்தலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் தலைமை யிலான அதிமுக ஆட்சி அமைய முன்னால் அமைச்சரும் கோவை புறநகர் மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணியின் அறிவுறுத்தலின் படி வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆலோசனைக்கேட்பஅனைவரும் பாடுபடவேண்டும் என்று உறுதியேற்றனர். வார்டு கழக செயலாளர் எம்.ஆர்.எஸ்.மோகன் தலைமையில் துணைச் செயலாளர் பொன் கணேசன், நகர்மன்ற உறுப்பினர் ஜெ.மணிகண்டன், அவை தலைவர் சுடர் பாலு, ஆகியோர் முன்னிலையில் மேளதாளம் முழங்க நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பேரவை செயலாளர் நரசப்பன், ஐ.டி.விங்க் செயலாளர் சண்முகம்,காய்கடை சசிக்குமார்,சிடிசி செந்தூர்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் பின்பு அனைவருக் கும் இனிப்பு மற்றும் கட்சி காலண்டர் வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0