அதிமுக விவகாரம் : இபிஎஸ் கடிதத்தை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்..!

திமுக நிர்வாகிகள் தேர்வுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் கடிதத்தை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கோரி அதிமுக தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஏப்ரல் 20ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட்டது. மேலும் அதிமுகவின் சட்டவிதிகள் திருத்தம், நிர்வாகிகள் மாற்றம் போன்றவற்றை ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அதிமுகவில் அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் கட்சியின் புதிய மாற்றங்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் பெயர் பட்டியலை ஆகியவற்றை இணைந்திருந்தார்.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அதனுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் அதனை பதிவிட்டுள்ளது..