கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசும்போது நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைத்தால்தான் 2026 இல் அண்ணன எடப்பாடியாரின் அதிமுக ஆட்சி அரியணை ஏறும் என்றார். ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பேசும் பொழுது நாம் எல்லோரும் ஒன்றாக இருந்து அதிமுகவில் மாணவர்களை சேர்க்க வேண்டும் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் மாவட்ட செயலாளர் பகுதி செயலாளர் வட்டச் செயலாளர் இவர்கள் எல்லோரும் திரண்டு இணைந்து பணியாற்றினால் தான் அதிமுக 2026 இல் ஆட்சிக்கு வரும் என்றார். கழக அமைப்புச் செயலாளர் மனோகரன் பேசும் பொழுது மேற்கு தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை அதிமுக வெற்றி பெற்று உள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மேற்கு தொகுதியில் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றி ணைந்து பாடுபட வேண்டும். அடுத்து அதிமுக ஆட்சி எடப்பாடி தலைமையில் அமைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன், நிர்வாகிகள் கே சி பரமசிவம், ஜாக்குலின், மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாபன் , என்ஜினியர் கார்த்திகேயன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக், வெங்கட்பிரபு, பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா ரோஜர், ராஜேந்திரன், கலைவாணன், எம்ஆர்ஆர் முஸ்தபா, வர்த்தக அணி துணை செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன் , அப்பாஸ், இலியாஸ், பாலாஜி, முன்னாள் கோட்ட தலைவர் ஞான சேகர், வக்கீல் முத்துமாரி, நிர்வாகிகள் கருமண்டபம் சுரேந்திரன், பெருமாள், வட்ட செயலாளர்கள் ஒத்தக்கடை மகேந்திரன், K.முத்துக்குமார், கணேஷ், கதிர்வேல், ஸ்டீபன் விஷ்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0