திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் வெளிநடப்பு.

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் முதலில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி நேற்று கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் பெருகிவரும் போதைப் பொருள் விற்பனையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம் குறித்து பேச முயன்ற போது திமுக கவுன்சிலர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததால் வெளிநடப்பு செய்தார் . வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழகத்தில் அதுவும் திருச்சியில் போதை பொருள் மிகவும் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்று குற்றச்சாட்டு கூறினார்.