அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் இணைவது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. பாஜக – அதிமுக கூட்டணி முறிந்து இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து வருகின்றது. பாமக, தேமுதிக கட்சிகளை தங்கள் கூட்டணியில் இழுக்க இரு கட்சிகளும் தீவிர பேச்சுவார்த்தையில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வருகின்றனர்.தமிழிசை செளந்தரராஜன் ராஜிநாமா கடிதம்! இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமினுடன் நேற்றிரவு பாமக எம்எல்ஏ அருள் நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸை இன்று அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்திக்கின்றனர். அதேபோல், தேமுதிகவுடனும் தொகுதி பங்கீட்டை அதிமுக இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நாளை மறுநாள் மார்ச் 20-ஆம் தேதி மூன்று கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0