நீலகிரி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று உதகைக்கு வருகை தந்த கழகத் துணை பொது செயலாளர் ஆ. இராசா அவர்களுக்கு திமுக கழகத்தினர் மலர்த்துளி வாழ்த்து

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக மகத்தான வெற்றி பெற்று முதன் முதலாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த, கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் உதகை சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது நிகழ்ச்சியில் திமுக தொழிலாளர் அணி மாநில துணை அமைப்பாளர் குமார், உதகை சட்டமன்ற உறுப்பினர் எல். கணேசன், மாவட்டத் துணைத் தலைவர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, உதகை நகர செயலாளர் ஜார்ஜ், செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, உதகை நகராட்சி தலைவர் வாணிஸ்வரி, எலிக்கல் ரவி,நெசவாளர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர் தியாகு கூட்டணி கட்சி தலைவர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.