கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி .செந்தில் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மேற்கு மண்டல மாவட்டங்களில் சட்டம் – ஒழுங்கு பாது காக்கவும், குற்ற தடுப்பு பணிகளை தீவிர படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மேற்கு மண்டல மாவட்டங்களில் கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக கோரிக்கைகள் வந்தன.. எந்தெந்த பகுதிக்கு போலீஸ் நிலையம் தேவை? அங்குள்ள மக்கள் தொகை பரப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்து தேவையான இடங்களில் புதியபோலீஸ் நிலையங்கள் அமைப்பது ஆலோசனையில் உள்ளது. குறை தீர்ப்பு கூட்டங்களில் பெறப்படும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகள் நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க சாலை பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறோம். கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேலைக்காக வெளி மாநிலங்களில் இருந்து அதிக தொழிலாளர்கள் வந்து செல்கிறார்கள். இவர்களில் சிலர் சொந்த ஊரிலிருந்து கஞ்சா கடத்தி வருவதாக புகார் வருகிறது .அதை தடுக்க ரயில் நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் பிரதான சோதனை சாவடி வழியாகத்தான் செல்வார்கள் என சொல்ல முடியாது எனவே அந்தந்த பகுதி போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் வெவ்வேறு பகுதிகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. புதிய தொழில் நிறுவனங்கள் போன்றவற்றால் கிராமப் பகுதிகளில் வேகமாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அங்கு புதிய குடியிருப்புகளும் அதிகமாகி வருகிறது. எனவே அந்தப் பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0