எதிர்க்கட்சிகள் உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு.!!

டெல்லி: மணிப்பூர் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பெண்களுக்கு நேரிட்ட கொடுமை பற்றி பிரதமர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளதாக மாநிலங்களவையில் அமைச்சர் பியூஸ் கோயல் பதில் அளித்துள்ளார்..