நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர். அரசு கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.

நீலகிரி மாவட்டம், உதகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ்
செயல்படும் உதகை அரசு தொழிற்பயிற்சி மாணவர் விடுதி, ஐடிஐ ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி, அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி ஆகிய விடுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வை யிட்டு, ஆய்வு மேற்கொண்டார், இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை அரசு தொழிற்பயிற்சி மாணவர் விடுதியினை நேரில் பார்வையிட்டு, அங்கு மாணவர் களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினையும், விடுதியின் சுற்றுப்புறத்தையும், விடுதியில் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார், இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஐடிஐ ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியினை நேரில் பார்வையிட்டு, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள், கழிப்பறை, குடிநீர் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் கலந்துரையாடியபோது, உடற்பயிற்சி கூடம் ஏற்படுத்தித்தர கோரிக்கையாக முன்வைத்தனர். சமூக பொறுப்பு நிதியிலிருந்து உடற்பயிற்சி அமைப்பதற்காக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததார்,
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் உதகை அரசு ஆதிதிராவிடர்
நலகல்லூரி மாணவியர் விடுதியினை நேரில் பார்வையிட்டு, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், கழிப்பறை வசதிகள், உணவுப் பொருட்கள் இருப்பு அறை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மற்றும் உதகையை
முள்ளிக்கொரை அன்பு அறிவு அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தினை நேரில்
பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் முதியோர்களுக்கு
ஏற்படுத்தப்படும் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் வசதிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின்போது, உதகை நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குப்புராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) சக்திவேல் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அன்பு அறக்கட்டளை நிர்வாக இயக்குனர்கள் மற்றும் பலர் உள்ளனர்.