தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் நாளை மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றி குமரன், தனசேகரன் ,புகழேந்தி ,வழக்கறிஞர் பிரபு, தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அதில் ஒருங்கிணைப்பாளர் வெற்றி குமரன் பேசுகையில் நாளை திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மாலை 4 மணி அளவில் இலங்கையில் ஈழத்தில் கொல்லப்பட்ட உயிர் நீத்த தமிழ் சொந்தங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன், கொங்கு பேரவையின் தலைவர் தனியரசு உள்ளிட்ட பல தமிழ்தேசிய ஆர்வலர் கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மேலும் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் கட்சியை விட்டு வெளியேறி தற்போது தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கமாக உருவெடுத்துள்ளனர். இந்த இயக்கத்தின் நோக்கமும் தமிழ் தேசியம் மற்றும் தமிழர்களுக்கென தனி நாடு என்ற ஒரே சித்தாந்தத்தின் அடிப்படையில் பயணிக்க உள்ளோம்.நாம் தமிழர் கட்சி ஆரம்பிக் கப்பட்ட காலத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் ஆரம்பத்தில் தமிழ் தேசியத்தின் சித்தாந்தங்கள் பின்பற்றப்பட்டது. ஆனால் இன்று வலதுசாரி சித்தாந்தங்கள் பின்பற்றக்கூடிய செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இது தமிழகத்தில் மட்டு மல்ல வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழர்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் களுக்கும் இது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் என்பது தொடர்ந்து தமிழ் தேசியத்தையும், தமிழர்களுக்கான தனி முன்னெடுப்புகளையும் இந்த இயக்கம் கொண்டு செல்லும். இன்னும் பல இளைஞர் களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளோம். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரளவில் மட்டும் தமிழ் தேசியம் என்பதை பேசிவிட்டு நிஜ வாழ்க்கையில் அரசியல் வாழ்க்கையில் அவர் வலதுசாரி சித்தாந்தம் பின்னனியில் இயக்கப்பட்டுவதால் அவரை நம்பி நாம் தமிழர் கட்சியில் வந்து இணைந்த பல இளைஞர் களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது என்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0