சூலூர் காவல் நிலையத்தில் கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் திடீர் ஆய்வு..

கோவை; தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி பணியாற்றி வருபவர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம். இவர் நேற்று முன்தினம் சூலூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகள், குற்ற வழக்குகள் வழக்குகள், காவல் நிலை யத்தின் தூய்மை மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவ லர்களிடம் குறைகளை கேட்டு அறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது பொது மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். என்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுரைவழங்கினார். இந்த ஆய்வின் போது சூலூர்போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்..