மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கொச்சைப்படுத்திய நடிகை குஷ்புவுக்கு கண்டனம்..!! உருவப்படம் எரிப்பு

சூலூரில் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கொச்சைப்படுத்திய நடிகை குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பாஜக சார்பில் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மகளிர் உரிமைத் தொகையை பிச்சை எனக் கூறியுள்ளார். நடிகை குஷ்புவின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கொச்சைப்படுத்திய குஷ்புவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த குஷ்புவை கண்டித்து அவரது உருவப்படத்தை சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலலிதா முன்னிலையில் தெற்கு ஒன்றிய சூலூர் நகர மகளிர் அணி சார்பில் உருவப்படம் எரித்தனர். மேலும், மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண்கள் முழக்கம் எழுப்பினர். இந்நிகழ்வில் பேரூராட்சி உறுப்பினர்கள் கீர்த்திகா, லலிதா, சன்மதி, தங்கமணி, விஜயலட்சுமி, மணிமேகலை, கவிதா, மற்றும் மாவட்ட மகளிர் அணி சாப்ரா ஒன்றிய மகளிர் அணி கலங்கள் வளர்மதி சாவித்திரி,இந்திரா, மகளிர் அணி நகர மகளிர் அணி செயலாளர் கற்பகம், முன்னாள் கவுன்சிலர் கவுசல்யா ,ஒன்றிய ஐ டி விங் கவிதா மற்றும் மகளிர் அணியினர் சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்