தமிழக வெற்றிக்கழக தலைவரான நடிகர் விஜய்,அலுவலகத்தில் கட்சிகொடி வெளியிட்டு, உறுதிமொழி எடுத்துக் கொண்டார்

இந்த நிகழ்ச்சிக்கு விஜய் வந்த TN DR 1111 என்ற எண் கொண்ட டொயோட்டா கிருஷ்டா வாகனம், கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட எண் கொண்ட வாகனமாகும். கடந்த 19.5.2022 ஆம் ஆண்டு கோவை தெற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் இந்த இனோவா கிரிஸ்டா வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இயக்கப்படும் இந்த வாகனம், பல்வேறு சாலை போக்குவரத்து விதிமுறை மீறல்களையும் பிடிபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை 4700 ரூபாய் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இதில் கடைசியாக விதிக்கப்பட்ட 200 ரூபாய் அபராதம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. 4500 ரூபாய் இன்னும் அபராதம் செலுத்தப் பட வில்லை. அனைத்து வாகனங்களுக்கும் மாசு கட்டுப்பாட்டு தரச் சான்றிதழ் வாங்கி இருக்க வேண்டும். ஆனால் இந்த வாகனத்தில் கடந்த 18.5.23 அன்று உடன் மாசு கட்டுப்பாட்டு தரச் சான்றிதழ் தேதி காலாவதி ஆகியுள்ளது. இந்த வாகனத்தில் தான் இன்று நடந்த கொடி அறிமுகம் செய்து, கொடியேற்று விழாவில் நடிகர் விஜய் வந்து பங்கேற்றார்.