திருச்சி கருத்தரங்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் நடிகர் சத்யராஜ் பங்கேற்பு. திருச்சி தெற்கு மாவட்ட திமுக ஓட்டுனர் அணியினரின் கருத்தரங்கம். திருவெறும்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர ஓட்டுநர் அணி சார்பாக திருவெறும்பூர் MD ஹால் டிரைனிங் சென்டர் BHEL ல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் சேர்க்கும் திரைப்பட நடிகர்களின் கருத்துரை பகுதி ,ஒன்றிய, நகர, பேரூர்களில் ஆட்டோ டாக்ஸி ஸ்டாண்ட் உருவாக்கி பெயர் பலகை திறந்து ஓட்டுநர்களுக்கு தலைவர் கலைஞர் முகம் பொரித்த ஆடைகள் வழங்கினார். விழாவில் திரைப்பட நடிகர் சத்யராஜ் பேசியதாவது வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு அதிகமாக வர காரணம் அங்கு கல்வித்தரம் சரியாக இல்லாததுதான் அவர்களுக்கு சுயமரியாதை பகுத்தறிவு பெண் விடுதலை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும் அப்படி செய்தால் வட மாநிலங்களில் நடக்கும் கொடுமைகள் தடுக்கப்படும் தமிழகத்தில் பாமர மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது போல வட மாநிலங்களிலும் திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்க்க வேண்டும் அப்படி செய்தால் அங்கும் திராவிட மாடல் வளர்ந்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் வராது அசாம் மேற்குவங்கம் பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு திராவிட மாடல்களை கொண்டு சேர்க்கும் கருவியாக நான் இருப்பேன் என்றார். நிகழ்வில் வரவேற்புரை L.K.கருணாநிதி TNSTC மாவட்ட தலைவர்
தலைமை மாவட்ட அமைப்பாளர் M.முகமது இலியாஸ் நகரத் தலைவர் சரவணன் சிறப்பு அழைப்பாளர்களக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுச்சி உரையாற்றியவர் புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மாநில ஓட்டுநர் அணி செயலாளர் டி.செங்குட்டுவன் மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன். நிகழ்வில் மாவட்டக் கழக நிர்வாகிகள் சேகரன் வண்ணை அரங்கநாதன் செந்தில் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் துணை மேயர் திவ்யா மற்றும் மாவட்ட ஒன்றிய பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . இறுதியில் மாநகர ஓட்டுநர் தலைவர் பால்ராஜ் நன்றி உரையாற்றினார் இதில் இதில் ஏராளமான ஓட்டுனர் அணியினர் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0