கோவையில் வீடுகளில் ஆதரவற்று தனியாக வசிக்கும் முதியோருக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை நகரில் மட்டும் சுமார் 300 முதியோர்களின் பட்டியல் பெறப்பட்டு அந்த பகுதியில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர் .அந்தந்த பகுதிகளில் சென்று அவர்களை கண்காணிக்கவும், பிரச்சனைகள், அவசர உதவி ஆகியவற்றுக்கு உதவும் வகையில் ஸ்மார்ட் காவலர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது . மேலும் உரிய முறையில் ரோந்து செல்கிறார்களா? என்று உயர் போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். பல்வேறு பிரச்சினைகளால் பள்ளிகளுக்கு செல்லாமல் இடையில் நின்றவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்கவும் குற்றச்செயலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்தவும் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவினாசி ரோடு உள்ளிட்ட பல சாலைகளில் “யூடேர்ன்” போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் சில பகுதிகளில் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும். போக்குவரத்து நெரிசலை தீர்க்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்ற தடுப்பு நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ரவுடிகளுக்குள் மோதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும் இது தவிர தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கைது செய்யவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இவ்வாறு கூறினார்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0