திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மாத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்களின்
வீலிங் செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். இன் உதவி எண் 9487464651 கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு பல்வேறு நபர்களை கண்காணித்து சமூக வலைதளங்களை சோதனை செய்த போது திருச்சி மாவட்டம் குண்டூர் வடக்கு தெருவை சேர்ந்த குமரகுரு என்பவர் மகன் சச்சின் 18 வயது என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மேற்படி மாத்தூர் பகுதியில் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்து, அலட்சியமாக ஓட்டிச் சென்றும், அதனை வீடியோ காட்சியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார் என தெரிய வந்தது. வீலிங் செய்த நபர் மீது நவல்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சச்சினை கைது செய்து, அவரிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வரும் காலங்களில் இது போன்ற சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையபான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்பவர்கள் விபரங்கள் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி 9487464651 என்ற என்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பைக்கில் வீலிங் சாகசம் செய்பவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் என்று திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் ஐபிஎஸ் தெரிவித்தார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0