வால்பாறை காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை 350 கிராம் கஞ்சா பறிமுதல் இருவர் மீது வழக்கு பதிவு

கோவை மாவட்டம் வால்பாறை காவல் துறையினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் உத்தரவிற்கிணங்க கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க துரித நடவடிக்கை தொடர்ந்து மேற்க் கொண்டு வருகின்றனர் இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, காவலர்கள் கார்த்திக், மணிகண்டன்,வேல் மற்றும் சேவியர் ஆகியோர் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை வரக்கூடிய பேருந்தில் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது பழைய வால்பாறை பகுதியில் குடியிருந்து வால்பாறையில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலை செய்து வரும் ரித்தீஷ் வயது 22, என்பவர் 100 கிராம் எடையுள்ள கஞ்சா போதை பொருள் வைத்திருந்ததை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை செய்த போது கோவை எட்டிமடை பகுதியில் தனது நண்பர் ராஜேஷ்குமார் வயது 21, கொடுப்பதாக அளித்த தகவலின் படி உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, காவலர் 775 தனிப்பிரிவு காவலர் மணிகண்டன், காவலர்கள் சேவியர் மற்றும் வேல் ஆகியோர் கோவை சென்று ராஜேஷ் குமாரை பிடித்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வால்பாறை காவல் நிலையம் அழைத்து வந்து இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர் இச்சம்பவம் வால்பாறை பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.